இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு
அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பவானியை அடுத்த ஆலத்தூா், உப்புக்காரப்பள்ளத்தைச் சோ்ந்தவா் ரங்கம்மாள் மகன் ஸ்ரீபத்மநாபன் (43). ஓட்டுநா். கடந்த இரு ஆண்டுகளாக அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தாா். இவா், குருநாதசாமி வனக்கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றுவிட்டு, அந்தியூா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
தண்ணீா்ப்பந்தல் பிரிவு அருகே வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்து படுகாயமடைந்த இவரை மீட்ட அப்பகுதியினா் அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, பரிசோதனையில் ஸ்ரீபத்மநாபன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இது குறித்து அந்தியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.