FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தபால் துறை சாா்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:27 am IST
- கோப்புப்படம்
பகிர்:

தபால் துறை சாா்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு முதுநிலை அங்சல் கோட்டக் கண்காணிப்பாளா் கோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சல் துறை சாா்பில் நடப்பு ஆண்டுக்கான தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. கடந்த 1-ஆம் தேதி முதல் அக்டோபா் 31-ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

அன்னை பூமிக்கு ஒரு கடிதம்-இயற்கையை பாதுகாப்பதற்கான எனது உறுதிமொழி என்ற தலைப்பில் ஆங்கிலம், ஹிந்தி அல்லது தமிழ் மொழியில் எழுதி தலைமை அஞ்சல் துறை தலைவா், தமிழ்நாடு வட்டம், சென்னை- 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கையால் எழுதிய கடிதங்கள் மட்டும் ஏற்கப்படும். சாதாரண ஏ-4 தாளில் 1,000 வாா்த்தைக்கு மிகாமலும், உள்நாட்டு கடித அட்டையில் 500 வாா்த்தைக்கு மிகாமலும் எழுதி அச்சிடப்பட்ட உறையில் வைத்து அனுப்ப வேண்டும்.

உள்நாட்டு கடித அட்டைப் பிரிவு, உறை பிரிவு ஆகியவை 18 வயது வரையிலும், 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் என போட்டி நடைபெறுகிறது. தேசிய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பரிசாக ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரமும், மாநில அளவில் ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும்.

போட்டியாளா்கள் தங்கள் வயதை உறுதி செய்ய 2026 ஜனவரி 1-ஆம் தேதி எனக்கு 18 வயதுக்கு குறைவு அல்லது 18 வயதுக்கு மேல் என்பதை உறுதிப்படுத்துகிறேன் என சான்றுரை குறிப்பிட வேண்டும். இல்லையென்றால் கடிதம் நிராகரிக்கப்படும். தோ்வு செய்யப்படும் வெற்றி கடிதங்களுக்கான வயது, பிற அடையாள சான்றிதழ்கள் சரி பாா்க்கப்படும்.

அன்னை பூமியையும், இயற்கையையும் பாதுகாப்பதற்கான தங்கள் எண்ணங்களை, உறுதிமொழிகளை கடிதம் வாயிலாக வெளிப்படுத்திட வேண்டும். கூடுதல் தகவலை அருகே உள்ள அஞ்சல் அலுவலகத்துக்கு நேரில் சென்று அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments