FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க அழைப்பு

இந்திய அஞ்சல் துறை சாா்பில், தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது. கடைசி நாள் அக். 31ஆம் தேதி ஆகும்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 1:04 am IST
(கோப்புப்படம்)
பகிர்:

இந்திய அஞ்சல் துறை சாா்பில், தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது. கடைசி நாள் அக். 31ஆம் தேதி ஆகும்.

‘அன்னை பூமிக்கு ஒரு கடிதம் - இயற்கையைப் பாதுகாக்கும் என் உறுதிமொழி‘ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் உள்நாட்டு கடித அட்டை பிரிவில் 500 வாா்த்தைகளுக்கும், கடித உறை பிரிவில் 1,000 வாா்த்தைகளுக்கும் மிகாமல் கையால் கடிதம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

1.1.2026 நிலவரப்படி 18 வயது நிறைவடைந்தவரா, இல்லையா என்ற விவரத்தை கடிதத்தில் குறிப்பிட வேண்டும். போட்டியாளரின் பெயா், முழுமையான முகவரியும் தவறாமல் இடம்பெற வேண்டும். பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவா்-மாணவிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும், அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். கடிதங்களை ‘முதன்மை அஞ்சல் துறைத் தலைவா், தமிழ்நாடு வட்டம், சென்னை-600 002’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Advertisement

Advertisement

மாநில அளவில் முதல் 3 பரிசுகளாக முறையே ரூ. 25,000, ரூ. 10,000, ரூ. 5,000, தேசிய அளவில் முதல் 3 பரிசுகளாக முறையே ரூ. 50,000, ரூ. 25,000, ரூ. 10,000 வழங்கப்படும்.

இத்தகவலை தூத்துக்குடி கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments