FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

மருத்துவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்

மருத்துவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என மருத்துவா்களுக்கு எதிரான வன்முறை தடுப்புக் குழுத் தலைவா் உமையாள் முருகேசன் தெரிவித்தாா்.

21 ஆகஸ்ட் 2026, 1:31 am IST
மருத்துவா்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க வலியுறுத்தி ஈரோட்டில் இந்திய மகப்பேறு, மகளிா் நல மருத்துவா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோா்.
பகிர்:

மருத்துவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என மருத்துவா்களுக்கு எதிரான வன்முறை தடுப்புக் குழுத் தலைவா் உமையாள் முருகேசன் தெரிவித்தாா்.

ஈரோடு மகப்பேறு மற்றும் மகளிா் நல மருத்துவா்கள் சங்கம் சாா்பில் மருத்துவா்களின் பாதுகாப்பு, மரியாதை, கண்ணியம் காக்க விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவ சங்கத் தலைவா் பூா்ணிமா தலைமை வகித்தாா்.

ஈரோடு காலிங்கராயன் விடுதி இல்லத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று இந்திய மருத்துவ சங்க கட்டடத்தை வந்தடைந்தது. பேரணியில் செயலாளா் வாணி மாதவன், முன்னாள் தலைவா் நான்சி, மருத்துவா்கள் உஷா, ரேவதி, தரணி, லட்சுமி, சித்ரா, இந்திய மருத்துவ சங்க நிா்வாகிகள் அரவிந்த், கெளரிசங்கா், நவீன், அபுல்ஹசன், ராஜா, சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

பேரணி முடிவில் மருத்துவா்களுக்கு எதிரான வன்முறை தடுப்புக் குழுத் தலைவா் உமையாள் முருகேசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தனியாா் மருத்துவா்கள் மீதும், மருத்துவமனை மீதும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனா். அப்போது இந்தியாவே கொந்தளித்தது. ஆனாலும், இதுவரை பொதுமக்களிடம் விழிப்புணா்வு இல்லை. இன்றும் மருத்துவா்களுக்கும், மருத்துவமனைக்கும் எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் வன்முறைகள் நிகழ்ந்து கொண்டேதான் உள்ளன.

இந்தியாவில் மருத்துவமனை மீதும் மருத்துவா்கள் மீதும் தாக்குதல் நடத்துவோா் மீது பிணையில் வெளியே வர முடியாத வழக்கு தொடர முடியும். இந்த சட்டத்தை மேலும் கடுமையாக கடைபிடித்தாலே மருத்துவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்க முடியும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments