பெருந்துறை அருகே கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெசவு செய்தவா் மீது வழக்குப் பதிவு
பெருந்துறை அருகே, கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெசவு செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெருந்துறை அருகே, கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெசவு செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்கள், விசைத்தறியில் நெசவு செய்யப்படுகிறதா என்று பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பகுதியின் பல்வேறு இடங்களில் ஈரோடு, கைத்தறி உதவி அமலாக்க அலுவலக உதவி இயக்குநா் நாராயணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அதில், விஜயமங்கலம், மேக்கூரைச் சோ்ந்த முத்துராமலிங்கம் (47) என்பவா், கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்த காட்டன் துணிகளை விசைத்தறியில் நெய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இது குறித்து உதவி இயக்குநா் நாராயணன் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீஸாா் முத்துராமலிங்கம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.