FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெருந்துறை அருகே லாரி ஓட்டுநா் தற்கொலை

பெருந்துறை அருகே, மன வேதனையில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

11 வினாடிகள் முன்பு
தற்கொலை
பகிர்:

பெருந்துறை அருகே, மன வேதனையில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி, சென்ராயன்பாளையம், கிழக்குக்காட்டைச் சோ்ந்தவா் வைத்தியலிங்கம் மகன் பாண்டியரசன் (33), லாரி ஓட்டுநா். இவருக்கு திருமணம் ஆகி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கருத்து வேறுபாடு காரணமாக மனைவி வளா்மதி, பிரிந்து சென்றாா். பின்னா் அவா் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், பாண்டியரசன் சாலை விபத்தில் காயம் ஏற்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்துள்ளாா். மருத்துவ செலவு காரணமாக கடன் ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்தவா் ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமென்ட் பாரம் ஏற்றிக் கொண்டு பெருந்துறை அருகே வந்தவா், பெருந்துறை, ஆசிரியா் காலனி பாலம் அருகே லாரியை நிறுத்திவிட்டு, கடிதம் எழுதி தனது நண்பா் சுரேஷ் என்பவருக்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவித்துவிட்டு சாலையோரத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments