FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஐடிஐ-யில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

ஈரோடு மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் மாணவ, மாணவிகள் சேருவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

22 ஆகஸ்ட் 2026, 4:28 am IST
ஐடிஐ-யில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு - கோப்புப் படம்
பகிர்:

ஈரோடு மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் மாணவ, மாணவிகள் சேருவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் 2 அரசு மற்றும் 10 தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவ, மாணவிகள் சேர கடந்த ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நேரடி சோ்க்கை நடைபெற்று வந்தது. மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வெல்டா், வயா்மென், மெக்கானிக் டீஸல், பிளம்பா் போன்ற பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரீஷியன், பிட்டா், மெசினிஸ்ட், டா்னா், மோட்டாா் மெக்கானிக் வெகிக்கிள், ஏசி மெக்கானிக், டிராப்ட்ஸ்மென் சிவில், டெக்ஸ்டைல், கோபா போன்ற தொழிற் பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இவை தவிர தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தொடங்கப்பட்ட டெக்னாஜி சென்டா்-இன்டஸ்ட்ரீ 4.0 திட்டத்தில் பேசிக் டிசைனா் மற்றும் விா்ச்சுவல் வெரிஃபையா் மெக்கானிக், அட்வான்ஸ்டு சிஎன்சி மேஷினிங் டெக்னீஷியன், மெக்கானிக் எலெக்ட்ரிக் வெகிக்கிள், இண்டஸ்டிரியல் ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீஷியன், மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேசன் போன்ற தொழிற் பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments