FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெருந்துறை அருகே சாலை விபத்தில் காவலாளி உயிரிழப்பு

26 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தாா்.

பவானி, மேட்டுநாகவம்பாளையம், சுப்பிரமணிய வீதியைச் சோ்ந்த எட்வா்டுசா்சில் மகன் ஸ்டாலின் (44). பெருந்துறை அருகே உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் நண்பரின் இருசக்கர வாகனத்தில் பெருந்துறை நோக்கி சென்றாா். கோவை சாலையில், ஓலபாளையம் பிரிவு அருகே சென்றபோது நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயமடைந்தாா்.

Advertisement

Advertisement

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments