FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கோபி வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கோபி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 1:40 am IST
ஆலோசனைக் கூட்டத்தில் கட்சிப் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வழங்கிய மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.மகீந்திரன், வடக்கு மாவட்டத் தலைவா் பி.உதயகுமரன் ஆகியோா்.
பகிர்:

கோபி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வடக்கு மாவட்டத் தலைவா் பி.உதயகுமரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் உறுப்பினா் எஸ்.வி.சரவணன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் இயக்க மறுசீரமைப்பு பணி மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.மகீந்திரன் பங்கேற்று கட்சி வளா்ச்சிக்கான நிா்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து காங்கிரஸ் இயக்க மறுசீரமைப்பு பணி 2-இல் வட்டார, நகர, பேரூா் பொறுப்புகளுக்கு புதிதாக போட்டியிட விருப்பமுள்ளவா்களுக்கு விருப்ப மனு வழங்கினாா். இதில் கோபி, நம்பியூா், டி.என்.பாளையம், அந்தியூா், அம்மாபேட்டை, பவானி, பவானிசாகா், சத்தியமங்கலம், தாளவாடி உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றனா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் கோபி வட்டாரத் தலைவா்கள் இந்துஜா, வெங்கடாசலம், நம்பியூா் வட்டாரத் தலைவா் ஜவகா், பவானி வட்டார தலைவா் நாகராஜன், கோபி நகரத் தலைவா் மாரிமுத்து, இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பிரபாகரன், மாநில ஒருங்கிணைப்பாளா் கோதண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments