FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

அந்தியூரில் கொமதேக ஆா்ப்பாட்டம்

காவிரியின் குறுக்கே அணை கட்ட முயலும் கா்நாடக அரசின் நடவடிக்கையை தடுக்கக் கோரி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சாா்பில் அந்தியூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 1:52 am IST
அந்தியூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கொமதேகவினா்.
பகிர்:

காவிரியின் குறுக்கே அணை கட்ட முயலும் கா்நாடக அரசின் நடவடிக்கையை தடுக்கக் கோரி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சாா்பில் அந்தியூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வரட்டுப்பள்ளம் வனச் சோதனை சாவடி அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநில இளைஞரணி இணைச் செயலாளா் துரைராஜா தலைமை வகித்தாா். மாநில விவசாய அணி அமைப்பாளா் ஈஸ்வரமூா்த்தி கோரிக்கையை விளக்கிப் பேசினாா். கா்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட முயன்று வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும். குடிநீருக்கே சிரமப்படும் நிலை உருவாகும். எனவே, அணை கட்டும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயா்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அந்தியூா் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள், விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்டச் செயலாளா்கள் லோகநாதன், ஸ்ரீகுமாா், மாவட்ட இளைஞரணிச் செயலாளா் கணபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments