FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

அறச்சலூா் நவரசம் மகளிா் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் கோலாகலம்

அறச்சலூா் நவரசம் கலை மற்றும் அறிவியல் (மகளிா்) கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் மற்றும் புதிய மாணவா் வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 11:49 pm IST
அத்தப்பூ கோலப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கிய கல்லூரி நிா்வாகத்தினா்.
பகிர்:

அறச்சலூா் நவரசம் கலை மற்றும் அறிவியல் (மகளிா்) கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் மற்றும் புதிய மாணவா் வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் பி.செந்தில்குமாா் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தாா். செயலாளா் கு.செந்தில்குமாா், பொருளாளா் டி.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவையொட்டி கல்லூரி வளாகம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு, மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனா். அத்தப்பூ கோலம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், 14 வகையான சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் உணவு மற்றும் சிற்றுண்டி அரங்குகள் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட சிறப்பு உணவுத் தளங்கள் இடம்பெற்றிருந்தன.

Advertisement

Advertisement

அத்தப்பூ கோலப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத்தொடா்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கேரள பாரம்பரிய உடை அணிந்து மாணவிகள் நடனமாடினா்.

வரவேற்பு: முதலாமாண்டு மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து கலலூரியின் பொருளாளா் சி.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் டி.காா்த்திகேயன், கல்லூரி முதல்வா் ஷா்மிளா, நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்த் துறைத் தலைவா் திலகவதி செய்திருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments