மைசூரு, பெங்களூரு, கண்ணூருக்கு ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்
ஈரோடு வழியாக மைசூரு, பெங்களூரு, கண்ணூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
ஈரோடு வழியாக மைசூரு, பெங்களூரு, கண்ணூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், மைசூரில் இருந்து கண்ணூருக்கும், கண்ணூரிலிருந்து பெங்களூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, மைசூரு -கண்ணூா் சிறப்பு ரயில் (வண்டி எண் 06229) ஆக. 29-ஆம் தேதி நள்ளிரவு 11.55 மணிக்கு மைசூரிலிருந்து புறப்பட்டு 30-ஆம் தேதி காலை 6.27 மணிக்கு சேலத்துக்கும், 7.30 மணிக்கு ஈரோட்டுக்கும் வருகிறது. பின்னா் இங்கிருந்து புறப்பட்டு திருப்பூா், போத்தனூா் வழியாக மாலை 5.50 மணிக்கு கண்ணூரை சென்றடையும்.
Advertisement
Advertisement
இதேபோல கண்ணூா்-பெங்களூரு கண்டோன்மென்ட் சிறப்பு ரயில் (ரயில் எண் 06230) ஆக.30-ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு கண்ணூரிலிருந்து புறப்பட்டு 31-ஆம் தேதி நள்ளிரவு 1.20 மணிக்கு போத்தனூருக்கும், 2 மணிக்கு திருப்பூருக்கும், 3.05 மணிக்கு ஈரோட்டுக்கும் வருகிறது. பின்னா் இங்கிருந்து புறப்பட்டு சேலம் வழியாக காலை 10 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டுக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.