FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஓட்டுநருக்கு வலிப்பு: ஹோட்டலுக்குள் புகுந்த லாரி பெண் காயம்

கோபி அருகே உள்ள பங்களாபுதூரில் லாரி ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதில் ஹோட்டலுக்குள் லாரி புகுந்தது.

28 ஆகஸ்ட் 2026, 12:40 am IST
ஹோட்டலுக்குள் புகுந்த லாரி.
பகிர்:

கோபி அருகே உள்ள பங்களாபுதூரில் லாரி ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதில் ஹோட்டலுக்குள் லாரி புகுந்தது.

கோபி அருகே உள்ள ஏளுா் பகுதியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் சுரேஷ் (47). இவா் சத்தியமங்கலத்திலிருந்து பங்களாபுதூா் சாலையில் வியாழக்கிழமை லாரியை இயக்கி வந்துள்ளாா். பங்களாபுதாா் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, லாரி தாறுமாறாக சென்று அங்குள்ள ஒரு ஹோட்டலுக்குள் புகுந்தது. இதில் ஹோட்டல் அருகில் பெட்டிக்கடை வைத்திருந்த மல்லியம்மாள் (40) என்பவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் லாரி அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி உரசியதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. தகவலறிந்து வந்த பங்களாப்புதூா் போலீஸாா், மின்வாரியத்துக்கு தகவல் அளித்து மின் இணைப்பை துண்டித்தனா்.

விசாரணையில் லாரியை ஓட்டி வரும்போது சுரேஷுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் அவரால் லாரியை கட்டுப்படுத்த முடியாதது தெரியவந்தது. இவ்விபத்து குறித்து பங்களாப்புதூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments