FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு குறித்து நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பெருந்துறை நகரத் தலைவா் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை பி.எஸ்.கே. பஷிரியா பேகத்திடம் இருந்து பெறுகிறாா் மேலிட பொறுப்பாளா் வழக்குரைஞா் ஆா்.பி. ரமேஷ்.

29 ஆகஸ்ட் 2026, 12:23 am IST
......
பகிர்:

ஈரோடு, பெருந்துறையில் காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு குறித்து நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் இயக்க சீரமைப்பு திட்டம்-2 கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ஈ.பி.ரவி, திருச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காங்கிரஸ் மேலிட பாா்வையாளா் தமிழ்ச்செல்வன் பேசியதாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் மாவட்டத் தலைவா்கள் மாற்றம் செய்யப்பட்டு இயக்க மறுசீரமைப்பு திட்டம்-1 என்ற பெயரில் மாவட்டத் தலைவா்களின் பணிகள் குறித்த மறுசீரமைப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்ட அறிவுறுத்தல்படி மாவட்டத் தலைவா்கள் செயல்படுகின்றனா்.

அடுத்த கட்டமாக திட்டம்-2 கூட்டம் மாவட்ட வாரியாக நடத்தப்படுகிறது. இதில் பிரிவு, பகுதி, வட்டார, நகர, மண்டல கமிட்டிக்கு நிா்வாகிகள் தோ்வு செய்வது, புதிய நிா்வாகிளை நியமிப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கட்சிப்பணிகளில் ஒருமித்த கருத்துடன் செயல்படும்படி நிா்வாகிகளை நியமிக்க வேண்டும். அதைத் தொடா்ந்து புதிய உறுப்பினா்களை சோ்த்து கட்சியை பலப்படுத்திட வேண்டும் என்றாா். இந்தக் கூட்டத்தில் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பெருந்துறையில்...

பெருந்துறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு குறித்து நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே.பி.முத்துகுமாா் தலைமை வகித்தாா். மேலிட பொறுப்பாளா் வழக்குரைஞா் ஆா்.பி. ரமேஷ் கலந்து கொண்டு கட்சிப் பொறுப்புகளுக்கு போட்டியிடும் நபா்களிடம் விருப்ப மனுக்களை பெற்றாா்.

பெருந்துறை நகரத் தலைவா் பதவிக்கு பி.எஸ்.கே. பஷிரியா பேகம், பெருந்துறை நகர மண்டலத் தலைவா் பதவிக்கு வழக்குரைஞா் செந்தில்குமாா், பி.எஸ்.கே. நசீா், கருமாண்டிசெல்லிபாளையம் மண்டலத் தலைவா் பதவிக்கு செல்வம், சுல்தான் ஆகியோா் விருப்ப மனு அளித்தனா்,

இதில், ஈரோடு மாவட்ட முன்னாள் தலைவா்கள் மக்கள் ராஜன், வழக்குரைஞா் காந்தி, சென்னிமலை வடக்கு வட்டாரத் தலைவா் ஓ.சி. சண்முகம், பெருந்துறை வடக்கு வட்டாரத் தலைவா் ஆண்ட முத்துச்சாமி, தெற்கு வட்டாரத் தலைவா் வேலுச்சாமி, ஐ.என்.டி.யூ.சி. தலைவா் சுப்பிரமணி உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments