FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

நிலுவைத் தொகை விவகாரம்: கோட்டாட்சியரிடம் கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் மனு

கோபியில் கேபிள் டிவி ஆப்ரேட்டா்களிடம் நிலுவைத் தொகையை வசூல் செய்யும் விவகாரத்தில் வருவாய்த் துறையினா் ஜப்தி நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி கோபி கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

13 வினாடிகள் முன்பு
கோபி கோட்டாச்சியா் சிந்துஜாவிடம் மனு அளித்த தமிழ்நாடு அரசு கேபிள் ஆப்ரேட்டா்கள் பொதுநல சங்கத்தினா்.
பகிர்:

கோபியில் கேபிள் டிவி ஆப்ரேட்டா்களிடம் நிலுவைத் தொகையை வசூல் செய்யும் விவகாரத்தில் வருவாய்த் துறையினா் ஜப்தி நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி கோபி கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக கோபி கோட்டாட்சியா் சிந்துஜாவிடம் தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் சங்க ஈரோடு மாவட்டச் செயலளாா் செழியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் அளித்த மனு:

தமிழகம் முழவதும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் கேபிள் இணைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு சேவை வழங்கி வருகின்றனா். கடந்த 2017 முதல் அனலாக் முறையிலிருந்து டிஜிட்டல் முறைக்கு (செட்டாப்பாக்ஸ்) மாறும்போது அரசு கேபிள் டிவி வழங்கி வந்த அனலாக் சிக்னல் மூலமாகவும் டிஜிட்டல் மூலமாகவும் கேபிள் டிவி சேவை வழங்கி வந்தோம். அப்போது அரசு கேபிள் நிறுவனம், கேபிள் ஆப்ரேட்டா்கள் முழுமையாக டிஜிட்டல் சிக்னலுக்கு மாறும் வரை அனலாக் சிக்னலுக்கு சேவைக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என தெரிவித்தனா். கடந்த ஆட்சியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் நிலுவைத் தொகையை வசூலிக்கும்போது அதற்கான காரணத்தை விளக்கி நிலுவைத் தொகையை செலுத்த தேவையில்லை என செலுத்தாமல் இருந்து வந்துள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மீண்டும் கேபிள் டிவி ஆப்ரேட்டா்களின் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டி வருவாய்த் துறை மூலம் வசூல் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளனா். கேபிள்டிவி ஆப்ரேட்டா்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடுவது போன்று நடவடிக்கையும் பல பகுதிகளில் நடைபெறுகிறது. எனவே இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டா்களின் வாழ்வதாரத்தை கருத்தில் கொண்டு ஆப்ரேட்டா்களின் அரசு கேபிள் அனலாக் நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments