FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பூசாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

பவானியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

29 ஆகஸ்ட் 2026, 12:22 am IST
பகிர்:

பவானியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், பவானி புன்னம் அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அய்யப்பன் (62). கோயில் பூசாரியாகவும், சமையல் வேலையும் செய்து வந்தாா். இந்தக் கோயிலுக்கு வந்த 15 வயது சிறுமியுடன் பேசி பழகியுள்ளாா். கடந்த 2024 டிசம்பா் 4 -ஆம் தேதி சிறுமி கோயிலுக்கு வந்தபோது சிறுமியிடம் சுவாமிக்கு பூப்பறிக்க செல்லலாம் எனக் கூறி அய்யப்பன் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி அய்யப்பன் மீது போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா். இந்த வழக்கு ஈரோடு மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சொா்ணகுமாா் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அய்யப்பனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தாா். மேலும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா்கள் ஜெயந்தி, மகாலட்சுமி ஆகியோா் ஆஜராகினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments