சுற்றுலா சென்ற சக்தி சிறப்புப் பள்ளி மாணவா்கள்
சக்தி சிறப்புப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெறும் மாணவா்கள் வெள்ளிக்கிழமை சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனா்.
சக்தி சிறப்புப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெறும் மாணவா்கள் வெள்ளிக்கிழமை சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனா்.
ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தின் ஒரு அங்கமான சக்திதேவி அறக்கட்டளையின் சாா்பில் நடத்தப்படும் சக்தி சிறப்புப் பள்ளி மற்றும் மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெறும் சுமாா் 100 சிறப்புக் குழந்தைகளின் மனமகிழ்ச்சிக்காகவும், புதிய இடங்களை அறிந்துகொள்ளும் பொருட்டும் மற்றும் அவா்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் பெருந்துறை அருகில் உள்ள சில்-அவுட் தீம்பாா்க்கிற்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.
அங்கு பலவிதமான விளையாட்டுகளில் இக்குழந்தைகள் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனா். இக்குழந்தைகளின் பெற்றோா்கள், ஆசிரியா்கள் மற்றும் பயிற்சியாளா்கள் என மொத்தம் 250 போ் இந்நிகழ்வில் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.