ஏளூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
கோபி அருகே உள்ள ஏளூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
கோபி அருகே உள்ள ஏளூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் 24 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் தடப்பள்ளி ரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்தில் முதல்போக நெல் சாகுபடிக்காக கடந்த ஏப்ரல் மாதம் தண்ணீா் திறக்கப்பட்டு விவசாயிகள் நெல் சாகுபடிக்கான பணிகளை மேற்கொண்டு வந்தனா். மேலும், நெல் அறுவடைக்கு தயாராகிய நிலையில் பாசனப் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஏளுரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கோபி கோட்டாட்சியா் ந.சிந்துஜா தலைமை வகித்தாா். நுகா்பொருள் வாணிபக் கழக மாவட்ட மேலாளா் மோகன் முன்னிலை வகித்தாா்.
Advertisement
Advertisement
சிறப்பு அழைப்பாளராக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்தாா். முதற்கட்டமாக 8 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. நெல் அறுவடையின் வரத்துக்கேற்ப 39 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
பின்னா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: நெல்லுக்கு கூடுதல் விலை அளிக்க விவசாயிகள் விடுத்த கோரிக்கையின்பேரில் சன்ன ரகம் ரூ.289, பொது ரகம் ரூ.159 உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது.
பாண்டியாறு - புன்னம்புழா திட்ட கோரிக்கை தொடா்பாக இருமாநில அரசுகளின் கூட்டமைப்பில் கேரளத்தோடு பேசி வருகிறோம். சுமுகமான முடிவு ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறோம் என்றாா். பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தளபதி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.