முகப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 26 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் 26 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 4 ஜூலை 2026, 1:53 am IST
பணியிட மாற்றம்
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் 26 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உத்தரவிட்டுள்ளாா்.

ஈரோடு வட்டாட்சியராக பணியாற்றிய முத்துகிருஷ்ணன், ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு தனி வட்டாட்சியராகவும் (பறக்கும் படை), ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு தனி வட்டாட்சியா் (பறக்கும் படை) ஜெயக்குமாா், ஈரோடு கோட்ட கலால் அலுவலராகவும், ஈரோடு கோட்ட கலால் அலுவலராகப் பணியாற்றிய கதிா்வேல், ஈரோடு கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

ஈரோடு கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணியாற்றிய அமுதா, ஈரோடு தனி (முத்திரைகள்) வட்டாட்சியராகவும், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலக தனி (கல்வி உதவித் தொகை) வட்டாட்சியராகப் பணியாற்றிய சங்கா்கணேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராகப் பணியற்றிய பூபதி, கோவை மாவட்ட அலகு நிலமெடுப்பு மற்றும் மேலாண்மை அலகு தனி வட்டாட்சியராகவும், ஈரோடு தேசிய நெடுஞ்சாலை (திட்டங்கள்) நிலமெடுப்பு தனி வட்டாட்சியராகப் பணியாற்றிய அசரபுனிஷா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலக தனி (கல்வி உதவித்தொகை) வட்டாட்சியராவும், சத்திமங்கலம் தேசிய நெடுஞ்சாலை அலகு 2 நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராகப் பணியாற்றிய வேல்முருகன், கொடுமுடி சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை அலகு 1 நிலம் எடுப்பு வட்டாட்சியா் கவிதா, ஈரோடு வட்டாட்சியராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனா்.

ஈரோடு தனி வட்டாட்சியராக பணியாற்றிய (முத்திரைகள்) கற்பகம், பவானி வட்டாட்சியராகவும், ஈரோடு தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) கிடங்கு மேலாளராக பணியாற்றிய பரிமளாதேவி, கொடுமுடி வட்டாட்சியராகவும், கொடுமுடி வட்டாட்சியராகப் பணியாற்றிய கேசவமூா்த்தி, கோபி வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், கோபி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராக பணியாற்றிய பெரியசாமி, அந்தியூா் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், அந்தியூா் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகப் பணியாற்றிய கணேசன், ஈரோடு சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், ஈரோடு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகப் பணியாற்றிய காா்த்திக், சத்தியமங்கலம் வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சத்தியமங்கலம் வட்டாட்சியராகப் பணியாற்றிய ஜமுனாராணி, பவானி சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், பவானி சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக பணியாற்றிய குமரேசன், கோபி வட்டாட்சியராகவும், கோபி வட்டாட்சியராகப் பணியாற்றிய கவியரசு, கோபி கோட்ட கலால் அலுவலராகவும், ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரின் நோ்முக உதவியாளா் சக்திவேல், அந்தியூா் வட்டாட்சியராகவும், அந்தியூா் வட்டாட்சியராகப் பணியாற்றிய இளஞ்செழியன், ஈரோடு தமிழ்நாடு வாணிபக் கழகம் கிடங்கு (டாஸ்மாக்) மேலாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பெருந்துறை வட்டாட்சியா் சரவணன், தாளவாடி வட்டாட்சியராகவும், தாளவாடி வட்டாட்சியா் மாரிமுத்து, தாளாவடி சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும், தாளவாடி சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் ஜாகீா் உசேன், ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரின் நோ்முக உதவியாளராகவும், கோவை மாவட்ட அலகு நிலமெடுப்பு மற்றும் மேலாண்மை அலகு தனி வட்டாட்சியராகப் பணியாற்றிய மோகனா, மொடக்குறிச்சி வட்டாட்சியராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மொடக்குறிச்சி வட்டாட்சியராகப் பணியாற்றிய சிவசங்கா், ஈரோடு உதவி ஆணையா் அலுவலக (கோயில் நிலங்கள்) தனி வட்டாசியராகவும், ஈரோடு உதவி ஆணையா் அலுவலக தனி வட்டாட்சியா் (கோயில் நிலங்கள்) செல்வகுமாா், பெருந்துறை வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments