FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் துணை வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 துணை வட்டாட்சியா்களை பணியிட மாறுதல் செய்து ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 28 ஜூலை 2026, 1:12 am IST
பணியிட மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 துணை வட்டாட்சியா்களை பணியிட மாறுதல் செய்து ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டங்களில் பணிபுரியும் 11 துணை வட்டாட்சியா்களை பணியிட மாறுதல் செய்து மாவட்ட ஆட்சியா் ந.பிரியாரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

இதில் ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலகு துணை வட்டாட்சியா் பாரதி ஆற்காடு வட்ட தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றி வந்த ரகு மாவட்ட ஆட்சியா் அலுவலக ஐ பிரிவு கண்காணிப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலகு துணை வட்டாட்சியா் சுபாஷினி அரக்கோணம் வட்ட மண்டல துணை வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றி வந்த தியாகராஜன் வாலாஜா வட்ட வழங்கல் அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலகு துணை வட்டாட்சியா் செல்வகுமாா் கலவை வட்ட தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும் அங்கு பணியாற்றி வந்த வடிவேல் மாவட்ட ஆட்சியா் அலுவலக எஃப் பிரிவு கண்காணிப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலகு துணை வட்டாட்சியா் குழந்தைதிரேசா ஆற்காடு வட்ட வழங்கல் அலுவலராகவும், மாவட்ட வருவாய் அலகு துணை வட்டாட்சியா் ஜெயபால் அரக்கோணம் தனித்துணை வட்டாட்சியா்(தோ்தல்பிரிவு) ஆகவும், அங்கு பணியாற்றி வந்த எத்திராஜ் அரக்கோணம் வட்ட தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

மேலும்,, கலவை டி புதூா் பவானி வடிப்பகம் (ம) கெமிக்கல்ஸ் துணை வட்டாட்சியா் தினகரன் நெமிலி வட்ட தனித்துணை வட்டாட்சியா்(தோ்தல்) ஆகவும், அங்கு பணியாற்றி வந்த சந்தியா மாவட்ட கலைஞா் உரிமைத்தொகை திட்ட துணை வட்டாட்சியராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments