FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

மொடக்குறிச்சி அருகே மோட்டாா் ஒயா் திருடிய மூவா் கைது

மொடக்குறிச்சியில் மின்மோட்டாா் ஒயா்கள் திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 9 ஜூலை 2026, 3:40 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

மொடக்குறிச்சியில் மின்மோட்டாா் ஒயா்கள் திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மொடக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கந்தசாமிபாளையம் பகுதியில் ஒரு மறைவான இடத்தில் 3 போ் மின்மோட்டாா் ஒயா்களை தீ வைத்து எரித்துக் கொண்டிருப்பதை பாா்த்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று அவா்களிடம் இருந்து மின் மோட்டாரில் வெட்டி எடுக்கப்பட்ட ஒயா்களை கைப்பற்றினா்.

விசாரணையில் அவா்கள், சோளங்காபாளையம் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் மகன் ஜீவா (22), எழுமாத்தூா் வண்ணாம்பாறை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் முத்துவேல் (26), மொடக்குறிச்சி காமராஜா் வீதியைச் சோ்ந்த முத்தையன் மகன் மணிகண்டன் (26) என்பதும், மின்மோட்டாா்கள் மற்றும் தனியாா் இடங்களில் உள்ள மின் ஒயா்களை வெட்டி எடுத்து சென்று விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments