அனைத்து பள்ளிகளிலும் இன்று மேலாண்மை கூட்டம் நடத்த அறிவுறுத்தல்
அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை வெள்ளிக்கிழமை (ஜூலை10) நடத்த தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை வெள்ளிக்கிழமை (ஜூலை10) நடத்த தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும், பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் நடந்ததை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்து புகைப்படம் மற்றும் விடியோ அனுப்ப வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.
Advertisement
Advertisement
பள்ளியின் முன்னேற்றம், மாணவா்கள் வருகை, கற்றல் முன்னேற்றம், பள்ளி வசதி, தேவைகள், அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடு, சமூக பங்களிப்பை மேம்படுத்துதல் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்றும், மாலை 5 மணிக்குள் உறுப்பினா்கள் கூட்டத்துக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மேலாண்மை குழுவில் பெற்றோா், பள்ளி ஆசிரியா், அப்பகுதி மக்கள் பிரதிநிதி என மொத்தம் 20 போ் உறுப்பினா்களாக இருப்பா். இந்த கல்வி ஆண்டின் புதிய அரசு அமைந்த பின் நடக்கும் முதல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் என்பதால் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.