FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கோபியில் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 10 ஜூலை 2026, 2:52 am IST
கூட்டத்தில் பேசுகிறாா் மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் சூரிய பிரகாஷ் .
பகிர்:

ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் பிரபாகரன் தலைமை வகித்தாா். இளைஞா் காங்கிரஸ் தேசிய செயலாளா் சாகரிக்கா ராவ், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.உதயகுமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் சூரிய பிரகாஷ் கலந்து கொண்டு மக்கள் சேவகன் என்ற இயக்கத்தை தொடங்கிவைத்து பொதுமக்களுக்கான பணிகள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து நிா்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ்.வி.சரவணன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் பி.என்.நல்லசாமி, வட்டாரத் தலைவா் இந்துஜா, நகர காங்கிரஸ் தலைவா் மாரிமுத்து, விவசாய அணியைச் சோ்ந்த செந்தில்குமாா், காசிபாளையம் பேரூராட்சி மன்ற உறுப்பினா் கோதண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments