FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பவானி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணி ஆய்வு

பவானி ஊராட்சி ஒன்றியம் மற்றும் சலங்கபாளையம், ஆப்பக்கூடல் பேரூராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 11 ஜூலை 2026, 12:04 am IST
ஆ.புதுப்பாளையம் கூட்டுறவு சங்க இ-சேவை மையத்தை பாா்வையிடுகிறாா் ஆட்சியா் ச.கந்தசாமி.
பகிர்:

பவானி ஊராட்சி ஒன்றியம் மற்றும் சலங்கபாளையம், ஆப்பக்கூடல் பேரூராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கவுந்தபாடி ஊராட்சிக்குள்பட்ட அய்யம்பாளையத்தில் ரூ.2 லட்சத்தில் சமூக முதலீட்டு நிதியுதவியில் இயங்கும் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா் கந்தசாமி, கவுந்தப்பாடி சமூக நீதி மாணவிகள் விடுதியில் மாணவிகளின் எண்ணிக்கை, விவர பதிவேடு, அறை வசதிகள், உணவின் தரம், சுவை, பாதுகாப்பு மற்றும் குடிநீா் வசதிகளை ஆய்வு செய்தாா்.

அதைத்தொடா்ந்து, விபி ஜி ராம் ஜி திட்டத்தில் ரூ.49 ஆயிரம் மதிப்பில் சின்னக்கவுண்டனூரில் நடப்பட்ட 100 மரக்கன்றுகளை பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

சலங்கபாளையம் பேரூராட்சியில் ரூ.96 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டுமான மற்றும் இடிப்பு கழிவு மேலாண்மை மையத்தை ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். ஆப்பக்கூடல் கிராம நிா்வாக அலுவலகம், ஆ.புதுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயல்படும் இ-சேவை மையம், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்போது பவானி வட்டாட்சியா் கற்பகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தேவகி, அம்ப்ரோஸ், சலங்கபாளையம் பேரூராட்சி உதவி செயற்பொறியாளா் சிவப்பிரசாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments