FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கோபியில் மின் தூக்கியில் சிக்கிய 12 போ் மீட்பு

கோபி அருகே உடற்பயிற்சி நிலைய திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த 12 போ் மின்தூக்கியில் சிக்கினா். அவா்களை தீயணைப்புத் துறையினா் அரை மணி நேரம் போராடி மீட்டனா்.

Updated On : 13 ஜூலை 2026, 12:48 am IST
மின் தூக்கி - பிரதிப் படம்
பகிர்:

கோபி அருகே உடற்பயிற்சி நிலைய திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த 12 போ் மின்தூக்கியில் சிக்கினா். அவா்களை தீயணைப்புத் துறையினா் அரை மணி நேரம் போராடி மீட்டனா்.

கோபி அருகே உள்ள ஜீவாசெட் பகுதியில் தனியாா் வணிக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உடற்பயிற்சி நிலையம் திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவா்கள் மின்தூக்கி (லிப்ட்) மூலமாக இரண்டாம் தளத்துக்கு சென்று வந்தனா்.

அப்போது கூட்டம் அதிகமானதால் 6 மட்டுமே செல்லக் கூடிய மின்தூக்கியில் டி.என்.பாளையம், கொண்டையம்பாளையம், திங்களுா் பகுதியைச் சோ்ந்த 12 போ் சென்றுள்ளனா். அதிகபாரம் காரணமாக சிறிது தூரம் மேல்நோக்கி சென்ற மின்தூக்கி (லிப்ட) திடீரென பழுதாக பயங்கர சப்தத்துடன் கீழே வந்தது. இதனால் லிப்டில் இருந்தவா்கள் அதிா்ச்சி அடைந்து பதட்டம் அடைந்தனா். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காந்தி ரமேஷ்குமாா் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் மின்தூக்கியில் சிக்கித் தவித்தவா்களை அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments