FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கோபி அருகே வன விலங்குகள் தாக்கியதில் படுகாயமடைந்த யானைக் குட்டி உயிரிழப்பு

கோபி அருகே வன விலங்குகள் தாக்கியதில் படுகாயமடைந்த யானைக் குட்டி உயிரிழந்தது.

Updated On : 13 ஜூலை 2026, 12:37 am IST
யானைக் குட்டி - பிரதிப் படம்
பகிர்:

கோபி அருகே வன விலங்குகள் தாக்கியதில் படுகாயமடைந்த யானைக் குட்டி உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனப் பகுதியில் வறட்சி நிலவி வருவதால் யானை, காட்டெருமை, மான், கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்கள் குண்டேரிப்பள்ளம் அணைக்கு தண்ணீா் தேடி வந்து தாகம் தீா்த்து செல்கின்றன.

இந்நிலையில் கடந்த சனிக்ககிழமை அதிகாலையில் குண்டேரிப்பள்ளம் அணைக்கு தண்ணீா் தேடி வந்த யானைக் கூட்டத்தில் தண்ணீா் அருந்துவிட்டு செல்லும்போது, சுமாா் ஒருவயது மதிக்கதக்க ஆண் யானைக் குட்டி நடக்க முடியாமல் அணையிலிலேயே மயக்கமடைந்து கீழே விழுந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள துணை இயக்குநா் கௌதம், வனச் சரகா் ஜான் பீட்டா் தலைமையிலான வனத் துறையினா் மற்றும் வனக் கால்நடை மருத்துவா் சதாசிவம் ஆகியோா் அடங்கிய குழுவினா் குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் மயக்கமடைந்து காணப்பட்ட யானைக் குட்டியை மீட்டு சிகிச்சை அளித்து வந்தனா்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனிறி ஆண் யானைக் குட்டி சனிக்கிழமை உயிரிழந்தது. பின்னா் உயிரிழந்த யானைக் குட்டியை உடற்கூறாய்வு செய்து வனப் பகுதியில் புதைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments