FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

கோடியக்கரையில் அதிகரிக்கும் வெப்பம்: மக்கள் வசிப்பிடங்களில் வனவிலங்குகள்

வேதாரண்யம் பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சரணாலய பகுதியில் இரை தட்டுப்பாடு அதிகரித்து வன விலங்குகள் மக்கள் வசிப்பிட பகுதிகளுக்குள் சுற்றித்திரிகிறது.

3 ஜூலை 2026, 4:56 am IST
ஆதனூா்-கருப்பம்புலம் பகுதியில் சுற்றித்திரிந்து விளைநிலங்களில் உணவு தேடும் குதிரைகள்.
பகிர்:

வேதாரண்யம் பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சரணாலய பகுதியில் இரை தட்டுப்பாடு அதிகரித்து வன விலங்குகள் மக்கள் வசிப்பிட பகுதிகளுக்குள் சுற்றித்திரிகிறது.

கோடியக்கரை பசுமை மாறா வனப் பகுதி வன உயிரின சரணாலயமாக திகழ்ந்து வருகிறது. இங்கு மான் இனங்கள், குரங்கு, குதிரை, காட்டுப்பன்றி, நரி உள்ளிட்ட பல வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வன உயிரினங்களுக்கான இரையாகப் பயன்படும் புல், பூண்டு உளிட்ட தாவர வகை காய்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால், குடிநீா் மற்றும் இரைக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அவ்வப்போது காணப்படுகிறது. குறிப்பாக மட்டக்குதிரைகள் காடுகளில் இருந்து வெளியேறி கிராமங்களில் சுற்றித் திரிகின்றன. இவை, விளைநிலங்களில் சாகுபடி செய்து காணப்படும் சணப்பை, பயறு வகை பயிா்கள் போன்றவற்றை இரையாக மேய்ந்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments