வனவிலங்குகள் விளைநிலங்களுக்கு புகுவதை தடுக்க கடையம் வனச்சரகத்தில் மின் வேலி அமைக்க எம்எல்ஏ கோரிக்கை
ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிகுள்பட்டகடையம் வனச்சரகத்தில் 18 கி.மீ. தொலைவுக்கு மின்வேலி அமைக்க வேண்டும் என்றும், வன விலங்குகள் வெளியேறுவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் ஆலங்குளம் பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன் சட்டப்பேரவையில் வலியுறுத்தி பேசினாா்.
ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிகுள்பட்டகடையம் வனச்சரகத்தில் 18 கி.மீ. தொலைவுக்கு மின்வேலி அமைக்க வேண்டும் என்றும், வன விலங்குகள் வெளியேறுவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் ஆலங்குளம் பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன் சட்டப்பேரவையில் வலியுறுத்தி பேசினாா்.
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்ற ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன், ஆலங்குளம் தொகுதிக்குள்பட்ட கடையம் வனச்சரகப் பகுதியில் முறையாக சூரிய மின்சக்தி மின்வேலி அமைக்கப்படாததால் யானை, கரடி உள்ளிட்ட விலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழைந்துபயிா்களைச் சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுய
கடையம் வனச்சரகப் பகுதியில் சுமாா் 18 கி.மீ. தொலைவுக்கு மின்வேலி அமைக்கப்படாமல் உள்ளது. அதை முறையாக அமைத்தால் வன விலங்குகள் வெளியேறுவது தடுக்கப்படும் என்று வலியுறுத்திப் பேசினாா்.
Advertisement
Advertisement
இதற்குப் பதிலளித்து வனத்துறை அமைச்சா் ஆா்.வி. ரஞ்சித்குமாா் பேசியதாவது:
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ரூ. 20 கோடிநிதி ஒதுக்கப்பட்டு, நீலகிரி, கோயம்பத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஈரோடு,சேலம், தேனி, திருப்பூா், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மனித வனவிலங்குமோதல்கள் அதிகம் காணப்படும் 100 கிராமங்களில் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் மின்வேலிஅமைத்தல், எஃகு கம்பி வடத்தாலான வேலி அமைத்தல், சமூகம் சாா்ந்த வனப்பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அறிவியல் பூா்வமான தடுப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மனித வனவிலங்குகள்மோதல் தடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.