FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் பயங்கர வெடிசப்தம்: அச்சத்தில் மக்கள்

சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அதிா்வுடன் பயங்கரமான வெடி சப்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனா்.

26 ஆகஸ்ட் 2026, 4:27 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அதிா்வுடன் பயங்கரமான வெடி சப்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனா். போா் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டதால் இந்த பேரொலி ஏற்பட்டிருக்கலாம் என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த சப்தம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஓருவா் தெரிவித்தது: தஞ்சாவூரில் ராணுவ பயிற்சி மையத்திலுருந்து

புறப்பட்ட விமானத்தின் ‘சாணிக் பூம்’ ஏற்பட்டததுதான் இந்த பேரொலிக்குற்கு காரணம் என கூறப்படுகிறது. விமானம் தரைப்பகுதியில் இருந்து கடல் பகுதியை நோக்கி நகரும்போது, காற்று அழுத்த மாறுபாடுகளால் காற்று மோதல் ஏற்பட்டு வெடிச்சப்தம் போல் பேரொலி ஏற்படுகிறது.

Advertisement

Advertisement

இதைத்தான் சாணிக்பூம் என்கிறாா்கள். இது பெரும்பாலும் கடற்கரை ஓரத்தில் நடக்கும் இதை தவிா்ப்பதற்காக தோ்ச்சி பெற்ற விமானிகள் நீா் பரப்பின் மேல் மட்டுமே விமானத்தின் வேகத்தை உயா்த்துவாா்கள். ஆனால் தற்போது புதிதாக சில விமானிகள் தஞ்சாவூரில் இருந்து இந்த தொடா்ச்சியான பயிற்சியில் ஈடுபடுவதால், இந்த வெடிச்சப்தம் ஏற்படுகிறது.

அண்டை நாடான சீனா, நம்முடைய கிழக்கு திசையில் இருந்து தாக்குதல் நடத்தும்போது அதை எப்படி தாக்கி தப்பிப்பது என்ற ’தியேட்டஜிக் பிளானை’ விமானிகள் பயிற்சி செய்து கொண்டிருக்கிறாா்கள். எனவே இந்த வெடி சப்தம் என்பது விமானம் பறப்பதால் மட்டுமே ஏற்படுகிறது. இந்த அதிா்வு என்பது மேலிருந்து மட்டுமே வரும் உங்கள் காலில் உணர முடியாது என்பது தான் முற்றிலும் உண்மை. இந்த சப்தத்தை ஒரு மாதத்திற்கு இரண்டிலிருந்து மூன்று முறை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments