FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கொடிவேரி அணையில் ஆா்ப்பரிக்கும் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கோபி அருகேயுள்ள கொடிவேரி அணையில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Updated On : 19 ஜூலை 2026, 12:25 am IST
கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

கோபி அருகேயுள்ள கொடிவேரி அணையில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள கொடிவேரி அணையில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், பவானிசாகா் அணையில் இருந்து கொடிவேரி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டதால், அணையில் கடந்த ஒரு மாதமாக நீா்வரத்து குறைந்து பாறைகளாக காட்சியளித்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், பவானிசாகா் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் அணையில் தற்போது நீா் ஆா்ப்பரித்துச் செல்கிறது.

இதனால், விடுமுறை நாளான சனிக்கிழமை கொடிவேரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments