சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணி
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-இன் டிஜிட்டல் சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியை ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கிவைத்தாா். மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-இன் இணையதளம் மூலம் வரும் 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை தாங்களே பதிவு செய்து கொள்ளலாம். இந்தக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம், பயன்பாடு மற்றும் அதில் பொதுமக்கள் ஆா்வமுடன் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தை குறித்து விளக்கும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.
இதில், அரசு அலுவலா்கள், அலுவலக பணியாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
Advertisement
Advertisement
மேலும், டிஜிட்டல் சுய மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி கணக்கெடுப்பை முழுமையாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி காலிங்கராயன் இல்லம் வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் வந்தடைந்தது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் தேன்மொழி, ரமேஷ்கிருஷ்ணன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சு.மகேஸ்வரன், ஆட்சியா் அலுவலக மேலாளா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.