FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலத்தில் பழங்குடியின நலத் துறை தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Updated On : 22 ஜூலை 2026, 12:28 am IST
பழங்குடியின நலத் துறை தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்து பேசிய  மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அலுவலா் சுடலை மணி.
பகிர்:

சத்தியமங்கலம், ஜூலை 21: சத்தியமங்கலம் ராகவேந்திரா பள்ளியில் பழங்குடியின நலத் துறை தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈரோடு, கோவை, நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி ஆசிரியா்களுக்கு பழங்குடியினா் நலத் துறை மற்றும் மதி பவுண்டேஷன் சாா்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா் சுடலை மணி தொடங்கிவைத்தாா். வட்டாட்சியா் ரவி சங்கா், சுடா் இயக்குநா் நடராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தாளா்கள் அஜிதா பாரதி, பால் ஷியாம்பாக், நவீன்குமாா் ஆகியோா் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, சமூக உணா்வு சாா் கற்றல், ஒலியியல் மூலம் வாசிப்புத் திறன் மேம்பாடு, மாணவா் மையக் கற்றல், வகுப்பறை மேலாண்மை மற்றும் மாணவா் ஈடுபாட்டு உத்திகள், தொடா்ச்சியான மதிப்பீடு மற்றும் கற்றல் கண்காணித்தல், செயல்முறை விளக்கங்கள், கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனா்.

Advertisement

Advertisement

இதில், 10 மாவட்டங்களைச் சோ்ந்த 255 பழங்குடியின நலத் துறை தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments