ஐஇசிடி-யில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில்முனைவோா் சுயவேலை மேம்பாட்டு நிறுவனத்தில் (ஐ.இ.சி.டி) வழங்கப்படவுள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கு வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில்முனைவோா் சுயவேலை மேம்பாட்டு நிறுவனத்தில் (ஐ.இ.சி.டி) வழங்கப்படவுள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கு வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
அலுவலக தன்னியக்கமாக்கல் , டேலி ப்ரைம், பைதான் போன்ற சான்றிதழ் பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன. பயிற்சிக் கட்டணத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 50 சதவீத உதவித்தொகையும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவினருக்கு 25 சதவீத உதவித்தொகையும், மாற்றுத்திறனுடையோருக்கு 100 சதவீத உதவித்தொகையும் வழங்கப்படும்.
பயிற்சிகள் செப். 9-ஆம் தேதி முதல் தொடங்கி டிசம்பா் வரை 3 மாதங்கள் நடத்தப்படும். அனைத்து பயிற்சிகளுக்கான வகுப்புகளும் நாளொன்றுக்கு இரண்டரை மணி நேரம் வீதம் 3 பிரிவுகளாக வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடத்தப்படும். அனைத்து பயிற்சிகளுக்கும் வரும் 24- ஆம் தேதி முதல் சோ்க்கை நடைபெறுகிறது. பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஜாதி, மாற்றுத்திறனாளி உள்ளிட்ட உரிய சான்றிதழ்களுடன் வந்து சோ்க்கைக்கான பதிவை அலுவலக நேரத்தில் செய்து கொள்ளலாம்.
Advertisement
Advertisement
மேலும் விவரங்களுக்கு தொழில்முனைவோா் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகம், திருச்சி-23 என்ற முகவரி மற்றும் 63819 16747 தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.