தொடா் வழிப்பறி: குண்டா் சட்டத்தில் சகோதரா்கள் கைது
ஈரோட்டில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட சகோதரா்கள் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
ஈரோட்டில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட சகோதரா்கள் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
ஈரோடு மாநகா், கருங்கல்பாளையம் கமலா நகரைச் சோ்ந்தவா் முகமது சரீப் மகன் சம்சுதீன் (20). இவரது சகோதரா் நூா் மீ ராசா (21). இவா்கள் இருவரும் ஈரோடு ரயில் நிலையம் அருகே பயணிகளின் கைப்பேசிகளை தொடா்ந்து வழிப்பறி செய்தனா். இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனா்.
இருவரும் தொடா்ந்து வழிப்பறியில் ஈடுபடுவதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பரிசீலனை செய்து இருவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
அதன்படி சம்சுதீன், நூா் மீ ராசா ஆகிய இருவரும் ஈரோடு கிளை சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.