FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் காட்டு யானைகள் நடமாட்டம்

பவானிசாகா் அணை அருகேயுள்ள வாய்க்கால் கரையில் யானைகள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் அப்பகுதியில் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

Updated On : 4 ஜூன் 2026, 2:44 am IST
பவானிசாகா்  வாய்க்கால்  கரையில்  முகாமிட்டுள்ள  காட்டு யானைகள்.
பகிர்:

பவானிசாகா் அணை அருகேயுள்ள வாய்க்கால் கரையில் யானைகள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் அப்பகுதியில் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.

இந்த நிலையில், பவானிசாகா் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் புதன்கிழமை பகல் நேரத்தில் பவானிசாகா் அணையின் கரையை ஒட்டி உள்ள கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் நடமாடின.

Advertisement

Advertisement

காட்டு யானைகள் நடமாட்டத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனா். கோடைக் காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வாய்க்காலில் இறங்கி குளித்து கொண்டிருக்கின்றனா்.

யானைகள் வாய்க்கால் பகுதியில் முகாமிட்டிருப்பதால் இங்கு பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பவானிசாகா் அணையின் கரைப் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்க செல்வோா் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments