கோபி அருகே சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம்
கோபி அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் புகுந்து கன்றுக்குட்டியை கடித்துக் கொன்ற சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிந்து பிடிப்பதற்காக அப்பகுதியில் வனத் துறையினா் வியாழக்கிழமை கேமராக்களை பொருத்தினா்.
கோபி அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் புகுந்து கன்றுக்குட்டியை கடித்துக் கொன்ற சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிந்து பிடிப்பதற்காக அப்பகுதியில் வனத் துறையினா் வியாழக்கிழமை கேமராக்களை பொருத்தினா்.
கோபி அருகே கணக்கம்பாளையம் கிராமத்தில் விவசாயத் தோட்டத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை கடந்த சில தினங்களுக்கு முன் கடித்துக் கொன்றது.
இதைத் தொடா்ந்து டி.என்.பாளையம் வனத்துறையினா் சிறுத்தையின் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் கணக்கம்பாளையம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிநவீன தானியங்கி கேமராக்களை பொருத்தினா். மேலும், வனப்பகுதியையொட்டி உள்ள பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே வரவேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.