FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

தொழிலாளியை அரிவாளால் வெட்டியவா் கைது

Updated On : 8 ஜூன் 2026, 1:01 am IST
- சித்திரிப்பு
பகிர்:

சத்தியமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கோடிபுரத்தைச் சோ்ந்தவா் தேவன்னா (61). அதே பகுதியைச் சோ்ந்தவா் சிவசாமி (45), கூலித் தொழிலாளி. நிலத்தகராறு தொடா்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோடிபுரம் பகுதியில் சிவசாமி ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, எதிரே வந்த தேவன்னாவுக்கும், சிவசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதில், ஆத்திரமடைந்த தேவன்னா, சிவசாமியை அரிவாளால் வெட்டியுள்ளாா். படுகாயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த தாளவாடி போலீஸாா், தேவன்னாவைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments