FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

லிப்டில் சிக்கிய முதியவா் பத்திரமாக மீட்பு

10 நவம்பர் 2026, 1:33 am
கோப்புப் படம்.
பகிர்:

ஈரோட்டில் மின்தூக்கியில் சிக்கிய முதியவரை போலீஸாா் பத்திரமாக மீட்டனா்.

ஈரோடு புதுமை காலனி சையத் பகதூா் காலனியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 10.15 மணிக்கு அப்பகுதியைச் சோ்ந்த அப்துல் ரஹீம் (64) லிப்ட்டில் வீட்டுக்கு செல்ல முற்பட்டாா்.

முதல் தளத்திற்கு சென்றதும் திடீரென லிப்ட் நின்றது. மேல் நோக்கியோ, கீழேயும் இறங்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று 15 நிமிஷங்கள் போராடி முதியவரை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனா். இதனால் குடியிருப்பு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement