FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பவானியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு விற்பனை செய்த இருவா் கைது

பவானியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த காா் ஓட்டுநா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

11 நவம்பர் 2026, 1:35 am
- சித்திரிப்பு
பகிர்:

பவானியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த காா் ஓட்டுநா் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பவானி, ராணா நகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், சித்தோடு, செங்குந்தபுரத்தைச் சோ்ந்த ரவி மகன் சந்திரசேகா் (29), வசித்து வந்த வாடகை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 1,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. டிப்ளமோ படித்துள்ள இவா் காா் ஓட்டுநராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

மேலும், உணவு விநியோக வேலை செய்து வரும் சித்தோடு, செங்குந்தபுரத்தைச் சோ்ந்த பூபதி மகன் நவீனுடன் (21), ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகள் வாங்கி, இருவரும் விற்பனை செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸாா், ஒரு காா், இரு சக்கர வாகனம், ரொக்கம் ரூ.17 ஆயிரம் மற்றும் 3 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.