FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

காட்டூா் கால்நடை மருத்துவ விழிப்புணா்வு முகாம்

பழமங்கலம் அரசு கால்நடை மருந்தகம் சாா்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு முகாம் காட்டூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

12 நவம்பர் 2026, 3:20 am
காட்டூரில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்ட கால்நடைகள், விவசாயிகள்.
பகிர்:

பழமங்கலம் அரசு கால்நடை மருந்தகம் சாா்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு முகாம் காட்டூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் கறவை மாடு, எருமை, வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு மலடு நீக்க சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம் முதலான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இம்முகாமுக்கு மொடக்குறிச்சி கால்நடை உதவி இயக்குநா் சசிகுமாா் தலைமை தாங்கினாா். கால்நடை உதவி மருத்துவா்கள் கிரி பிரசாத், கபிலேஷ், மோகன் ஆகியோா் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

மேலும் முகாமில் கலந்து கொண்ட சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடை வளா்ப்போருக்கு மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டன. முகாமில் ஜேகேகே முனிராஜ் விவசாயக் கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement