FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணை நீா்மட்டம் 78.24 அடியை எட்டியது

பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் 78.24அடியை எட்டியுள்ளது.

13 நவம்பர் 2026, 11:56 pm
பவானிசாகா் அணை
பகிர்:

பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் 78.24அடியை எட்டியுள்ளது.

தமிழகத்தில் மேட்டூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நீா் தேக்கமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி அணை நீா்மட்டம் 78.24 அடி, அணையில் நீா் இருப்பு 14.77 டிஎம்சி ஆக உள்ளது. சுற்றுவட்டார பல்வேறு பகுதியில் பெய்யும் மழைநீா் ஓடைகளில் வழியாக சென்று பவானி ஆற்றில் கலப்பதால் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் நீா் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நீா் வரத்து அதிகரித்து நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.