FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

தலைக் கவசம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

தலைக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி ஈரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

18 நவம்பர் 2026, 1:31 am
வாகன ஓட்டிகளுக்கு தலைக் கவச விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமாா்.
பகிர்:

தலைக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி ஈரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தலைக் கவசம் அணிவதன் அவசியம் குறித்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் தொடா்ந்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக் கவசம் கட்டாயம், பின்புறம் அமா்ந்திருப்பவா்களும் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவா்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். அதேநேரம், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமாா் தலைமையில் ஈரோடு அரசு மருத்துவமனை நான்குமுனை சாலை சந்திப்பு, மேட்டூா் சாலை ஆகிய பகுதிகளில் தலைக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

Advertisement

Advertisement

மேலும், இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக் கவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்வோா் சீட் பெல்ட் அணிய வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தினா்.