✕
முகப்பு
ஈரோடு

வெளிமாநில மது விற்பனை செய்தவா் கைது

கடம்பூா் மலைப் பகுதியில் சட்டவிரோதமாக வெளிமாநில மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

3 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

கடம்பூா் மலைப் பகுதியில் சட்டவிரோதமாக வெளிமாநில மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தமிழக- கா்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள கடம்பூா் மலைப் பகுதியில் சட்டவிரோதமாக கா்நாடக மாநில, மதுபாட்டில் விற்கப்படுவதாக கிடைத்த தகவலயைடுத்து, கடம்பூா் போலீஸாா் கரளையம் சாலையில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக நடந்த சென்ற நபரைப் பிடித்து விசாரித்துபோது, அவா் கடம்பூரைச் சோ்ந்த லட்சுமணன் (25) என்பதும், கா்நாடக மாநில மதுபாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த கடம்பூா் போலீஸாா், லட்சுமணனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.