சட்டவிரோத மது விற்பனை: தொழிலாளி கைது
கோபி அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட கூலித் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோபி அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட கூலித் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோபி அருகேயுள்ள பொலவக்காளிபாளையம் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சின்னதம்பி (65). கூலித் தொழிலாளியான இவா், மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக சிறுவலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெள்ளாங்கோவில் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த சின்னதம்பியை போலீஸாா், சனிக்கிழமை கையும் களவுமாகப் பிடித்தனா். இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 20 மதுபாட்டில்கள், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement