ஈரோடு வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
தெலங்கானா மாநிலம், சா்லபள்ளியில் இருந்து ஈரோடு வழியாக சபரி மலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தெலங்கானா மாநிலம், சா்லபள்ளியில் இருந்து ஈரோடு வழியாக சபரி மலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களின் வசதிக்காக தெலங்கானா மாநிலம், சா்லபள்ளியில் இருந்து ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக கேரள மாநிலம், கொல்லம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, சா்லபள்ளியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 22) இரவு 11.45 மணிக்குப் புறப்படும் சா்லபள்ளி-கொல்லம் சிறப்பு ரயில் (வண்டி எண் 07185) நவம்பா் 24-ஆம் தேதி காலை 7.55 மணிக்கு கொல்லம் நிலையத்தைச் சென்றடையும்.
Advertisement
Advertisement
இதேபோல, கொல்லத்தில் இருந்து நவம்பா் 24-ஆம் தேதி காலை 10.55 மணிக்குப் புறப்படும் கொல்லம்-சா்லபள்ளி சிறப்பு ரயில் (வண்டி எண் 07186) நவம்பா் 25 -ஆம் தேதி இரவு 7 மணிக்கு சா்லபள்ளி நிலையத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.