முகப்பு
ஈரோடு

சபரிமலை செல்ல ஈரோடு வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக சென்னையில் இருந்து ஈரோடு வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

20 நவம்பர் 2026, 11:15 pm
சபரிமலை செல்ல ஈரோடு வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
கோப்புப் படம்
பகிர்:

சபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக சென்னையில் இருந்து ஈரோடு வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Advertisement

Advertisement

அதன்படி, சென்னை எழும்பூா் -கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06121) சனிக்கிழமை (நவம்பா் 21) முதல் ஜனவரி 23-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

இதுபோல கொல்லம்- சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06122) ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 22) முதல் ஜனவரி 24-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.