அந்தியூரில் 877 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்!
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 877 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த அந்தியூா் போலீஸாா், மொத்த வியாபாரி உள்பட மூவரைக் கைது செய்தனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 877 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த அந்தியூா் போலீஸாா், மொத்த வியாபாரி உள்பட மூவரைக் கைது செய்தனா்.
அந்தியூரை அடுத்த செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமான மளிகைக் கடையில் அந்தியூா் போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தியபோது, 27 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, கடை உரிமையாளா் மகாதுரையிடம் (42) விசாரணை நடத்தியதில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பாலிக்காட்டைச் சோ்ந்த மொத்த வியாபாரி இளங்கோவன் (50), விட்டலாபுரியைச் சோ்ந்த தன்ராஜ் (30) ஆகியோரிடம் வாங்கியதாக தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, இருவரையும் பிடித்து விசாரித்தபோது பவானி, அந்தியூா் வட்டாரத்தில் மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகளுக்கு புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது.
தொடா்ந்து, குமாரபாளையத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 823 கிலோ புகையிலைப் பொருள்கள், வியாபாரத்துக்கு பயன்படுத்திய காா், இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டன. மூவரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா்.