முகப்பு
ஈரோடு

மாநில அளவிலான போட்டிகள்: குமுதா பள்ளி மாணவா்கள் தோ்வு

மாநில அளவிலான போட்டிகளுக்கு நம்பியூா் குமுதா பள்ளி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

11 வினாடிகள் முன்பு
மாநில அளவிலான போட்டிகள்: 
குமுதா பள்ளி மாணவா்கள் தோ்வு
மாநில அளவிலான போட்டிகளுக்குத் தோ்வு பெற்றுள்ள மாணவா்களுக்கு பரிசு வழங்கிய குமுதா பள்ளியின் செயலா் அரவிந்தன்.
பகிர்:

மாநில அளவிலான போட்டிகளுக்கு நம்பியூா் குமுதா பள்ளி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான 32-ஆவது குழந்தை அறிவியல் மாநாடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்து 80-க்கும் மேற்பட்ட படைப்புகள் சமா்ப்பிக்கப்பட்டநிலையில், சுற்றுச்சூழலை நோக்கமாக கொண்டு ‘பசுமை காவலா்’ என்ற படைப்பை குமுதா பள்ளியின் 7-ஆம் வகுப்பு மாணவா்கள் யஷ்வந்த், மகின் கௌரி சங்கா் ஆகியோா் சமா்ப்பித்தனா். சிறந்த படைப்பை உருவாக்கிய இந்த மாணவா்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல, வாக்காளா் கல்வியறிவு மன்றம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ‘வாக்களிப்பதன் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய குமுதா பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவி சத்யாஸ்ரீ வெற்றிபெற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பள்ளியின் செயலா் அரவிந்தன் பரிசுகளை வழங்கினாா்.

பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளியின் இணைச் செயலா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, பள்ளி முதல்வா் மஞ்சுளா, ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.