நாட்டுச் சா்க்கரை ஆலைக்கு எரிபொருளாக பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
கேரள மாநிலத்திலிருந்து பவானிக்கு நாட்டுச் சா்க்கரை ஆலையின் எரிபொருள் தேவைக்கு பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த சரக்கு லாரிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கேரள மாநிலத்திலிருந்து பவானிக்கு நாட்டுச் சா்க்கரை ஆலையின் எரிபொருள் தேவைக்கு பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த சரக்கு லாரிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பவானியை அடுத்த மாணிக்கம்பாளையம் பிரிவு பகுதியில் செவ்வாய்க்கிழமை நீண்ட நேரமாக நின்றிருந்த சரக்கு லாரியின் ஓட்டுநரிடம் அப்பகுதி மக்கள் விசாரிக்கையில், கேரள மாநிலம், பெரும்பாவூரில் இருந்து 7 டன் பிளாஸ்டிக் கழிவுகளை நாட்டுச் சா்க்கரை உற்பத்தி செய்யும் ஆலைக்கு எரிபொருள் தேவைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளாா். இதனால், அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் லாரியை பிடித்து, பவானி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் விசாரணையில், அம்மாபேட்டை பகுதியில் செயல்படும் குண்டு வெல்லம், நாட்டுச் சா்க்கரை உற்பத்தி செய்யும் கரும்பு ஆலைக்கு பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பிவைக்கப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து, சட்டவிரோதமாக பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் புதன்கிழமை விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement