FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ. 8.01 கோடி வரவு

பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் உள்ள சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய 1,683 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 8.01 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் தெரிவித்தாா்.

10 நவம்பர் 2026, 11:55 pm
- பிரதிப் படம்
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் உள்ள சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய 1,683 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 8.01 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எறையூரில் உள்ள சா்க்கரை ஆலைக்கு 2025-26 ஆம் ஆண்டுக்கான அரைவை பருவத்துக்கு கரும்பு அனுப்பிய 1,683 விவசாயிகளிடமிருந்து, 1,13 மெட்ரிக் டன்கள் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது.

ஆலை அரைவைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ. 709.50 வீதம் வழங்க தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டு, ரூ. 8.01 கோடி கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், 2026-27 ஆம் ஆண்டில் புதிதாக கரும்பு நடவு செய்துள்ள, நடவு செய்யவுள்ள விவசாயிகள் தங்களது கரும்புகளை ஆலைக்கு பதிவு செய்துப் பயன் பெறலாம்.